தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவரும் உயிரிழப்பு!

0
460

தூத்துக்குடியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவரும் பலியான தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா ( 58 வயது) என்பவரும் ஒருவர்.

இலங்கை அகதியான இவர் ,தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணி (48 வயது), மகன் ஜெகதீஸ்வரன் (27 வயது) ஆகியோருடன் தங்கியிருந்தார். கட்டுமான வேலை செய்து வந்த இவர், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனி மனித உரிமைக்காக போராடுவதில் முன்னணியில் இருந்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100 ஆவது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் சென்ற அவர் பொலிஸாரின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார். வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து சென்ற அவர் இரத்த வெள்ளத்தில் மண்ணில் பிணமாகக் கிடந்தார்.

இந்த வீடியோ அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால் அவரது மனைவி செல்வமணிக்கோ தனது கணவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானது தெரிந்து விட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து அவர் கூறும் போது, டி.வி.யில் பார்த்தவுடன் துப்பாக்கிச் சூட்டில் பலியானது எனது கணவர் என தெரிந்துவிட்டது. இலங்கையில் இராணுவத் தாக்குதலுக்கு பயந்து உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 1981 ஆம் ஆண்டு இந்தியா வந்தோம். தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகிவிட்டார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here