வடக்கு உகண்டாவில் இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் 16 சிறுவர்கள் உட்பட குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரவு வேளையில் மின் விளக்கு இன்றி வந்த டிரக் வண்டி ஒன்றின் மீதே பஸ் மோதி இருப்பதோடு, பின்னர் அந்த டிரக் மற்றொரு டிரக் வண்டியில் மோதி இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
தலைநகர் கம்பாலாவில் இருந்து வடக்காக 220 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் கிரியன்டொங்கே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களை அங்கிருந்து அழைத்து செல்வதற்கு மீட்பு குழுவினர் அதிகம் போராடியதாக மேற்படி பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
உலகின் மிக மோசமான வீதிப் பாதுகாப்புக் கொண்ட நாடுகளில் ஒன்றான உகண்டாவில் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வீதி விபத்துகளில் 9,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.