பிரான்சில் திரான்சி நகரசபை முன்றலில் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம்!

0
1353

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் திரான்சி நகரசபை முன்றலில் காலை 10.00மணிமுதல்  13.30 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் திரான்சி வாழ் தமிழ்மக்களும் திரான்சி தமிழ்ச்சோலை மாணவர்களும் பங்குபற்றினார்கள்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் Seine Saint Denis பிராந்திய பாராளுமன்ற உறுப்பினரும்(Député Du Seine-Saint-Denis). (UDI) கட்சியின் தலைவரும். பிரான்சு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான பாராளுமன்றக் குழுவின் உபதலைவருமான (Vice-président groupe d’études peuple Tamoul).  திரு Jean-Christophe LAGARDE அவர்கள் நேரடியாக மக்களுடன் கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் திரான்சி மாநகர சபையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருடரான சந்திப்பு ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் எமது கோரிக்கையடங்கிய மனு பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டதுடன் எமது போராட்டம் இன அழிப்பு ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் தான் தமிழர்கள் பக்கம் நிற்பதாகவும் ஈழத்தமிழர்களின் பிரச்சனைபற்றி பிரான்சு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாகவும் உறுதியளித்ததுடன். பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரான்சு மொழி கலாச்சாரம் ஆகியவற்றையும் கற்று அறிந்து கொள்ளவேண்டும் என்பதை கூறியிருந்தார். தொடர்ந்து உங்கள் இன விடுதலைக்கான பணிகளை செய்யுமாறும் கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து M.Chabani-Maire Adj (conseiller Départemental) Seine Saint Denis பிராந்திய கவுன்சிலர் அவர்களும் கலந்துகொண்டார். அவரிடம் எமது கோரிக்கையடங்கிய மனு கையளிக்கப்பட்டது. தொடர்து அவர் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டார். மற்றும் திரான்சி நகரசபை உறுப்பினர் திரு.அலன் ஆனந்தன் அவர்களும் குறித்த கவனயீர்ப்பில் கலந்து கொண்டார்.

உணர்வுபூர்வமாக நடைபெற்ற கனயீர்ப்புப் போராட்டம் தமிழரின் தாரகமந்திரமான” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”என்ற தாரகத்துடன் நிறைவு பெற்றது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here