தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று (24) கிளிநொச்சில் இருவேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, வட – கிழக்கு புரட்சிகர சுயாதீன இளையோர் பேரவையினால் கிளிநொச்சி பேருந்து நிலைய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை நல்லூர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று றை நடத்தவுள்ளது.