“சுப்பர் மூன்’ அபூர்வ சூரிய கிரகணம் இன்று : இலங்­கையில் பார்க்கமுடியாது!

0
155

Solar  Australiaஅபூர்­வ­மா­னதும் முழு­மை­யா­ன­து­மான சூரிய கிர­கணம் 16 வரு­டங்­க­ளுக்குப் பிறகு இன்று நிக­ழ­வுள்­ளது. இலங்கை நேரப்­படி இன்று வெள்ளிக்­கி­ழமை பி.ப. 01.11 தொடக்கம் மாலை 5.20 வரைக்கும் ஏற்­ப­ட­வுள்ள இந்த சூரிய கிர­க­ணத்தால் ஐரோப்­பிய நாடுகள் சில இருளில் மூழ்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இருப்­பினும் இலங்­கையில் இந்த சூரிய கிர­கணம் தென்­ப­டாது என்­ப­துடன் இலங்­கையில் இத­னது தாக்­கமும் இருக்­காது என்று

ஆதர் சி. கிளாக் நிறு­வ­கத்தின் கட­மை­நேர வானியல் நிபுணர் தொிவித்தார். இதனால், வழக்­க­மாக கிர­க­ணங்­களின் போது பாது­காப்­பாக இருக்கும் கர்ப்­பிணிப் பெண்கள் போன்­றரோ் இன்­றைய கிர­கணம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவை­யில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சுப்பர் மூன் என்ற அழைக்­கப்­படும் இந்த சூரிய கிர­கணம் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு ஏற்­பட்­டது. அதனைத் தொடர்ந்து இன்று நிக­ழ­வுள்ள இந்த அபூர்வ கிர­க­ண­மா­னது லண்டன், நோர்வே உள்­ள­டங்­க­லாக பல்­வேறு ஐரோப்­பிய மற்றும் ஸ்கண்­டி­னே­விய நாடு­க­ளிலும், பராயா தீவு­க­ளிலும், ஆபி­ரிக்கா மற்றும் ஆசியா கண்­டத்தின் சில நாடு­க­ளிலும் தென்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் இவற்றுள் சில நாடு­களில் சூரிய ஔி 80 வீதம் வரை குறை­வ­டைந்து இருள்­ம­ய­மா­கி­விடும் என்று விஞ்­ஞா­னிகள் எதிர்­வு­கூ­றி­யுள்­ளனர்.

இதே­போன்­ற­தொரு சூரிய கிர­கணம் இதற்குப் பிறகு 2026ஆம் ஆண்­டி­லேயே ஏற்­படும் என விஞ்­ஞா­னிகள் குறிப்­பிட்­டுள்­ளனர். இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆய்வாளர்கள் நோர்வேக்கு படையெடுப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தரன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இது மீண்டும் 2053 மற்றும் 2073 ஆம் ஆண்டுகளில் உலகத்திற்கு தென்படுமென்றும் எதிர்காலத்தில் சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரத்தை பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் இந்த சூரிய கிரகணம் விஞ்ஞானிகளின் கண்களை திறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here