எதனோல் இறக்குமதியுடன் நான்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்பு:ரணில்

0
132

ranilஎதனோல் இறக்குமதியுடன் நான்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்புபட்டுள்ளனர். முடிந்தால் அதனை நிராகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்தார்.

புதிய அரசாங்கத்தினால் எந்த எம்.பிக்கும் எதனோல் இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்று குறிப்பிட்ட அவர், எதனோல் இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

வாய்மூல விடைக்காக அநுரகுமார திசாநாயக்க எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த பாராளுமன்றம் தியவன்னா ஓயாவுக்கு மத்தியிலன்றி எதனோல் ஆற்றுக்கு மத்தியிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த நிதி அமைச்சர், ரவி கருணாநாயக்க 2012 ல் 25 இலட்சத்து 63 ஆயிரம் மில்லியன் லீட்டரும், 2013ல் 10 இலட்சத்து 84 ஆயிரம் மில்லியன் லீட்டரும், 2014ல் 13 இலட்சம் மில்லியன் லீட்டரும் எதனோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 8ஆம் திகதி வரை எதனோல் இறக்குமதி செய்வது லாபம் பெறும் வியாபாரமாக இருந்தது. ஆனால் அதற்கான வரியை அதிகரித் துள்ளோம். கடந்த அரசில் எதனோல் பெருமளவு இறக்குமதி செய்யப்பட் டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here