நஞ்சு கலந்த விசமிகள் யார்?

0
169
visam 3ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில் மாணவர்கள் குடிநீருக்குப் பயன்படுத்தம் நீர் தாங்கியில் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்ட நிலையில், குறித்த நீரை அருந்திய மாணவர்கள் 27பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தினையடுத்து மாணவர்கள் குடித்த குடி நீர் இருந்த தாங்கியை சோதித்தபோது அதனுள் களைகளுக்கு பயன்படுத்தப்படும் களைநாசினி கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த களைநாசினி இருந்த போத்தலும் நீர் தாங்கியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறித்த விஷப் போத்தலும் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
visam 2
இந்நிலையில் குடிநீரில் கலக்கப்பட்டது ஒகனோ பொஸ்பேற் எனப்படும் களைநாசினி என கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த களைநாசினி திட்டமிட்டே மாணவர்களின் குடிநீர் தாங்கியில் கலக்கப்பட்டுள்ளதாக ஊர் மக்கள் மற்றும் பாடசாலை சமூகம் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த சம்பவத்தில் களைநாசினியை குடிநீரில் கலந்தவர்கள், நீர் விநியோகிக்கும் பிரதேச சபையின் மீது பழி சுமத்துவதற்காக இந்த செயலை செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளதுடன்,
குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை அடையாளம் காணுமாறும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும், பாடசாலைக்கும் சென்ற வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர்கள், கிராமத்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியதுடன், வடமாகாண முதலமைச்சரின் பணிப்பிற்கமைவாக மேற்படி இரு அமைச்சர்களும் வடமாகாண பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு கோரியிருப்பதுடன் முறைப்பாட்டையும் கொடுத்திருக்கின்றனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் படை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
விசமிகளின் ஈனச்செயல் என்கிறார் விவசாய அமைச்சர்  ஐங்கரநேசன்!
Ayngaran2104
குடிநீர் நெருக்கடியை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் நோக்கத்தோடு மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கக்கூடிய விசக்கிரிமிகளின் ஈனச் செயலால் 26 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு கடவுள் அல்லது இயற்கை தான் விரைந்து இவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும்  என விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார்.
இன்று ஏழாலை சிறிமுருகள் பாடசாலையில் விசக்கிரிமிகளினால் பாடசாலை நீரில் கலக்கப்பட்ட பூச்சிமருந்தால் 26 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அப்போது அங்கு விரைந்து வந்த விவசாய அமைச்சர் அவர்களை நேரில் பார்த்து விட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here