ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஹட்டன் நகரை நோக்கி சென்ற ஒன்று ஹட்டன் கால்நடை வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் நடந்து சென்ற மாணவியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆபத்தான நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மாணவி குமாரசாமி அபித்தியா (வயது 7) என தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிறு பிள்ளைக்கும் தாய்க்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களையும் வீதியில் நடந்து சென்ற மாணவியையும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவி கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.