ஏழாலையில் பாடசாலை நீர் தாங்கியினுள் நஞ்சு : 27 மாணவர்கள் வைத்தியசாலையில்! (காணொளி)

0
463
jaffna-schoolநஞ்சூட்டப்பட்டதாக நம்பப்படும் குடிநீரை பருகிய 29 சிறார்கள் மோசமான உடல்நிலை பாதிப்புடன் யாழ்.போதனவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏழாலை சிறீமுருகன் பாடசாலையினிலேயே இப்பரிதாபம் நடந்துள்ளது.

மாணவர்களது குடிநீர் பயன்பாட்டிற்கென வைக்கப்பட்டிருந்த தாங்கியினில் விசம் கலக்கப்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.அதனை அருந்திய மாணவர்களே உடல்நிலை பாதிப்புற்று ஒவ்வொருவராக மயங்கிவீழ்ந்துள்ளனர்.

water_student_008

உடனடியாக அவர்கள் தெல்லிப்பழை வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததையடுத்து வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு நேரினில் சென்று ஆய்வு செய்ததுடன் வைத்தியசாலைக்கு சென்று சிறுவர்களது நலன்களை பார்வையிட்டனர்.

பாடசாலையிலுள்ள குடிநீர்த் தாங்கியிலிருந்து நீரைப் பருகியதை அடுத்து, குறித்த மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.visam

குடிநீர் பருகிய மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் அதனைத் தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்கள் நீர்த்தாங்கியை சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாடசாலையில் உள்ள குடிநீர்த் தாங்கிக்குள் வெற்று நஞ்சுக் குப்பிகள் இரண்டு இருந்ததாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

தரம் ஒன்று தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்கள் உள்ள இந்த பாடசாலையில் 464 மாணவர்கள் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[mom_video type=”youtube” id=”/v7_qr0w77Aw”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here