பிரான்சில் ஆல்போர்வில் நகரில் முதன்முதலாக இடம்பெற்ற இன அழிப்புகவனயீர்ப்பு நிகழ்வு!

0
684

பிரான்சில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரான ஆல்போர்வில் பகுதியில் கடந்த (15.05.2018) செவ்வாய்க்கிழமை முதன்முதலாக கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருந்தது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பிற்பகல் 15.30 மணியளவில் அகவணக்கத்துடன் குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. . Driteror cabinet de maire நகரபிதாவின் அலுவலக அதிகாரியுடன் 15 நிமிட சந்திப்பு நடை பெற்றது. இச் சந்திப்பில் ஆல்போட்வில் தமிழ்ச்சங்க தலைவர், தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர். பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக பொறுப்பாளர். தமிழ் இளையோர் அமைப்பு செயலாளர், மற்றும் கனடாவில் இருந்து சமாதானத்திற்காக சர்வதேச ரீதியில் மரதன் ஓடும் ஈழத்தமிழர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நகரபிதாவின் அலுவலக அதிகாரியிடம் தமிழ் மக்களின் கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டத்துடன். எமது ஈழப்போராட்டம், மே 18 இன அழிப்பு பற்றி விளக்கப்பட்டது.
நகரபிதாவின் அலுவலக அதிகாரி. தான் நகரபிதாவிடம் எமது கோரிக்கையை எடுத்து சொல்லுவதாகவும். எமது பிரச்சினை தொடர்பாக நகரபிதா பிரான்சு வெளிநாட்டு அமைச்சுக்கு கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.
முதலாவது பிரதி நகரபிதா.. Driteror cabinet de maire அவர்கள் நேரடியாக வருகைதந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் சிறிய கலந்துரையாடலும் எமது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பிரதி நகரபிதா அவர்கள் எமது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பிரான்சு அரசுக்கு ஆல்போட்வில் நகரசபை சிபாரிசு செய்யும் என உறுதியளித்தார். அவருடன் ஆல்போர்வில் நகரசபை ஊழியர்கள், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஈழப்போரின் படங்களை பிரதி நகர பிதா பார்வையிட்டார்.
எமது கோரிக்கையடங்கிய பிரசுரம் ஆல்போர்வில் வாழ் பல்லின மக்களுக்கும் வழங்கப்பட்டன. நிறைவாக 17.00 மணியளவில் தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here