வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் என்ற ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளி வாவிக் கரையோரத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.05.2018) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 9 மணி தொடக்கம் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இரத்ததானம், அன்னதானம், ஆத்ம சாந்திப் பூஜை, உணர்வுபூர்வமாக ஆயிரம் சுடர்கள் ஏற்றி வைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.