காணி அதிகாரம் இல்லை என இரணைதீவுமக்களுகளிடம் தெரிவிப்பு !

0
214


தமது காணிகளை மீளப் பிடித்துக்கொண்ட இரணைதீவுமக்களுக்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நிரந்தரமாக குடியேறுவதற்கான அனைத்துஉரிமைகளும் இருப்பதாக கூறிய வட மாகாண முதலமைச்சர் தனக்கு காணி அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
26 வருடங்களாக்கு முன்னர் ஆக்கிரமித்த சிறீலங்கா கடற்படையினருக்கு இரணைதீவில் மூன்று ஏக்கர் காணிகள் மாத்திரம்போதுமானது என்ற உண்மையை வட மாகாண சபை, ஆட்சி முடிவடைவதற்கு ஒருசில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அறிந்துகொண்டதாகவும்வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இரணைதீவு மக்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒன்பது வருடங்கள் பூர்த்தியடைந்தும் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர அனுமதிமறுக்கபப்ட்டதை அடுத்து இந்த மக்கள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதிநிலமீட்புப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம்பூர்த்தியடைகின்ற போதிலும் எந்தவொரு தீர்வும் வழங்கப்படாததை அடுத்து கடந்த ஏப்ரல்மாதம் 23 ஆம் திகதி இரணைதீவுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்பட்ட இரணைதீவு மக்கள்அங்குள்ள இரணைமாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
உரிய தங்குமிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளும், வாழ்வாதாரங்களும்இன்றிய நிலையில் இரணைதீவில் தங்கியிருந்த வண்ணம் நில மீட்புப் போராட்டத்தில்தொடர்ந்தும் ஈடுபட்டுவரும் இந்த மக்களை பல்வேறு தரப்பினர் நேரில் சென்று சந்தித்துவருகின்றனர்.
வட மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டவர்கள் நேற்று (14) திங்கட்கிழமை நேரில் சென்று இரணைதீவுமக்களை சந்தித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here