வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் தொடரும் உண்ணாவிரதம்!

0
121

valaichchenai_factory1மட்டக்களப்பு – வாழைச்சேனை கடதாசி ஆலையில் நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையை கண்டித்து ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வாழைச்சேனை கடதாசி ஆலைக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, தொழிற்சாலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இதன் காரணமாக சுமார் 235 ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்தப்படாத நிலையில் ஊழியர்களுக்கான சம்பள கொடுப்பனவுகளும் நிர்வாகத்தினால் வழங்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஊழியர்களால் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்ததுடன் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு- வாழைச்சேனை வீதியில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாதாந்த சம்பளம் வழங்கப்படாமை காரணமாக தமது குடும்பம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here