வளலாய்ப் பகுதியிலிருந்து பொதுமக்க ளின் கிணறுகளைத் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்த இராணுவத் தினர், காணிகளை மக்களிடம் விடுவிப்ப தற்கு முன்பாக அவற்றை மூடியுள்ளனர் என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
25 வருடங்களாக இராணுவத் தி னரால் கையகப்படுத்தி வைக்கப்பட் டிருந்த வளலாய் கிராம சேவை யாளர் பிரிவின் ஒரு பகுதி கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் தமது காணிகளைத் துப்புரவு செய்து வருகின்றனர். அதன்போதே, இராணுவத்தினரால் கிணறு கள் மூடப்பட்டுள்ள விடயம் வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இது தொடர்பில் தற்போது அந்தப் பகுதியை துப்புரவு செய்துவரும ஒருவர் கூறுகையில், எனது வீட்டுக் கிணற்றை இரா ணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிணற்றைப் பயன்படுத்தி வாழைத் தோட்டம் செய்துள்ளனர். இந்த வாழைத் தோட்டத்துக்கு தண் ணீர் இறைப்பதற்கு, எமது ஊரைச் சேர்ந்த ஒருவரின் நீர் இறைக்கும் இயந்திரத்தையே வாடகைக்குப் பெற்றிருந்தனர். அவர் இங்கு வந்து இராணுவத்திற்கு நீர் இறைப்புச் செய்தார். என்னிடம் அவர் எனது வீட்டுக் கிணற்றிலிருந்தே இறைப் புச் செய்வதாவும் வீட்டை இடித்து விட்டதாகவும் கூறியிருந்தார். இப்போது வந்து கிணற்றைப் பார்க் கும் போது கிணறு மூடப்பட்டி ருக்கின்றது என்று கவலையுடன் தெரிவித்தார். இதேபோன்று பல கிணறுகள் மூடப் பட்டுள்ளன. குறித்த கிணறு களை மீண்டும் தோண்டுவதற்கு உரிமை யா ளர்கள் பயப்படுகின்றனர். அதில் ஏதாவது வெடிபொருள்கள் காணப் ப டுமோ என்ற அச்சம் அவர்களிடம் காணப்படுகின்றது.