கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்: மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை!

0
228

mannar bishopதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமது தேவைகளுக்காகப் பெயரளவில் வைத்திருக்கின்றார்களே தவிர அதனை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதனை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்கத் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிதி உதவியின் கீழ் நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழ் கட்சிகள் ஒவ்வொரு பக்கமாகப் பிரிந்து நிற்காது, ஒன்றாகச் செயற்பட்டாலேயே பலமாக இருக்கமுடியும். அப்பொழுது தான் காத்திரமான ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாகச் செயற்பட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தமிழ் மக்களின் பலத்தை அதிகரிக்கத் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முன்மொழிவை நான் சமர்ப்பிக்கின்றேன். இதற்கு நான் மட்டுமல்லாது, தமிழ் சிவில் சமுக அமைப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றன என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சுமந்திரனும் மேடையினிலிருக்க ஆயர் இத்தகைய கருத்துக்களினை முன்வைத்திருந்தார்.

சுமந்திரனால் கொள்வனவு செய்து வழங்கப்பட்ட மடிக்கணனிகள் மற்றும் புகைப்படக்கருவிகள் ஊடகவியலாளர்களினில் ஒரு பகுதியினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here