ஆரம்பமானது ஈரான் இஸ்ரேல் யுத்தம்- உலக யுத்தமாக மாறுமா?

0
659

 

இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஈரான் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து வளைகுடாவில் மிகுந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானின் Iranian Revolutionary Guards என்ற படைப்பிரிவு இஸ்ரேலைக் குறிவைத்து இன்று அதிகாலை 12.10 மணி முதல் சுமார் 20 ஏவுகணைகளை ஏவி தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

அமெரிக்காவுக்கும் ஈராணுக்கு ஆணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்டுள்ள முறுகலை அடுத்து ஈரான் இந்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேலின் பலம் வாய்ந்த Iron dome rocket defense system மூலமாக முறியடித்த இஸ்ரேல், சிறியாவில் நிலைகொண்டுள்ள ஈரானிய படை நிலைகள் மீது கடுமையான வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானின் படை கட்டமைப்புக்களின் அனேகமான அனைத்து நிலைகள் மீதும் தமது வான்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல்கள் இருந்துவரும் நிலையில் இன்று அதிகாலை ஆரம்பமாகி உள்ள இந்தச் சண்டைகள், மற்றொரு பரிமானத்தை அடையும் நிலையை நோக்கி இட்டுச்செல்வதற்கு வாய்ப்புள்ளதாக போரியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.

 

சிரியாவில் ஈரான், ரஷ;யா போன்ற நாடுகளின் படைகளும் நிலைகொண்டுள்ள நிலையில் இஸ்ரேல் சிரியா மீது மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் இலகுவாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றே கூறப்படுகின்றது.

சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights) என்ற பிரதேசத்தை 1967ம் ஆண்டு முதல் இஸ்ரேல் கையகப்படுத்தி தன்டன் இணைத்துள்ளது.

சிரியாவுக்கு சொந்தமானது என்றும், அதேவேளை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துள்ளதுமான இந்த கோலன் ஹைட்ஸ் (Golan Heights) என்ற பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படையினரைக் குறிவைத்துத்தான் இன்று அதிகாலை ஈரான் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here