ஜனாதிபதியை சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு.!

0
382

 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க முயற்சித்த போது ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் அனுமதி மறுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும், அதன் பின்னரான காலப்பகுதிகளிலும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கையளிக்கப்பட்ட நிலையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி அவர்களது உறவுகளால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றனர்.

சுமார் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில், இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டங்கள் தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றன.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வுகள் நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதன் போது, மேதின கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திக்க முயற்சித்த போதிலும், பாதுகாப்பு படையினரால் அவர்கள் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமது உறவுகள் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டதற்கான சாட்சிகள் இருக்கும் போது, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தெரிவித்துள்ளார்

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தால் ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here