பருத்தித்துறை நகராட்சி மன்றத்தின் முன்பாக அப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டட அனுமதியின்றி, சட்டத்தைமீறி இயங்கிவரும் மதுபானசாலையை அகற்றக்கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோவிலுக்கு அருகில் பாடசாலைக்கு அருகில் மதுபானக்கடையை அனுமதிக்கலாமா போன்ற பதாகைகளை ஏந்தியவாறு மகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.