மன்னாரில் உள்ள மூன்று வீடுகள் மீது மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த உடைமைகள் சேதமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை(7) அதிகாலை மழையுடன் கூடிய கால நிலை நிலவியது. இதன்போது மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது குறித்த வீடுகளில் உள்ள பெறுமதி மிக்க மின் சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. வீடுகளில் உள்ள தென்னை மரங்கள் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பகுதியில் எவ்வித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டனர்.