பிரான்சு, ஜே ர்மனி , பிரித்தானியா ஆகியநாடுகள் ஈரான் உடன் கொண்டுள்ள சர்வதேச அணுசக்தி உடன்படிக்கைகுறித்து அமெரிக்கா என்ன முடிவெடுத்தாலும் தொடரும் என பிரான்சு வெளியுறவு அமைச்சர் -வெஸ் லி டிரியன் ( Jean-Yves Le Drian) தெரிவித்துள்ளார்..
ஈ ரான் அணு ஆயுதம் பெறுவதை நிறுத்த இந்த உடன்படிக்கை சிறந்த வழி என்பதால், இதைக் காப்பாற்ற இந்த மூன்று நாடுகளும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள பலன்களைத் தர அமெரிக்கா அல்லாத பிற நாடுகள் உறுதி அளித்தாலும் உடன்படிக்கையை ஈரான் கடைபிடிக்கும் என்று ஈ ரான் அதிபர் ஹசன் ருஹானி கூறியுள்ளார்.