அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை சீற்றம் காரணமாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிமலை சீற்றம் காரணமாக ஹவாயின் பல பகுதிகளிலும் அண்மைக்காலங்களில் 12 நில அதிர்வுகள் பதிவாகியதாக அமெரிக்க புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் குடியிருப்பு தொகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹவாயில் கீலவேயா மலையில் ஏற்பட்ட கடும் எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 2000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று 6.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத் தக்கது..