நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு!

0
243

நைஜீரியாவில் கொள்ளைக்காரர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடக்கு நைஜீரியாவில் கடுனா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மகாணத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில, அம்மாகாணத்தின் பிர்னின் குவாரி பகுதியில் அமைந்தள்ள குவாஸ்கா கிராமத்தில் கொள்ளைக்காரர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 45 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகள் உட்பட ஏராளமானோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் பலரது உடல்கள் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியை ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் பிர்னின் குவாரி பகுதியில் உள்ள சுரங்கத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here