பிரான்சில் சிறப்பாக இடம்பெற்றுவரும் புலன்மொழி வளத்தேர்வு 2018

0
559

தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் புலன் மொழி வளத்தேர்வு 2018, கடந்த 05.05.2018 சனிக்கிழமை ஆரம்பமாகியது.
சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்று (06.05.2018) ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து எதிர்வரும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.
இருதினங்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் காலை 7.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி மண்டபப் பொறுப்பாளர்களிடம் தேர்வு வினாத்தாள்களை ஒப்படைத்தார். அத்துடன் பிரான்சில் இடம்பெறவுள்ள மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பிரசுரங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

தேர்வில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியமையைக் காணமுடிந்தது. வெள்ளை, கறுப்பு சீருடைகளுடன் மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பிரான்சில் தற்போது கடும் வெப்பம் உள்ள காலநிலைக்கு மத்தியிலும் பெற்றோர்கள் வெளியில் காத்திருந்ததையும் காணமுடிந்தது.
பெரும்பாலான மாணவர்கள் மிகவும் திறமையாக தமது ஆற்றல்களை தேர்வில் வெளிப்படுத்திவருவதாக தேர்வில் கலந்துகொண்ட தமிழ்பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை பிரான்சில் Île De France – மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் தேர்வுக்குத் தோற்றுவதுடன்; 260 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றிவருகின்றனர், 05.05.2018 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் 06.05.2018 ஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் நடைபெற்று முடிந்த நிலையில் எதிர்வரும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை 13 தேர்வு நிலையங்களில் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற்றுவருவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் வெளிமாவட்டங்களான Nice, Beau Soleil, Toulouse, Rennes, Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux ஆகிய இடங்களிலும் குறித்த புலன்மொழித் தேர்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ்மொழி பொதுத் தேர்வு வரும் 02.06.2018 சனிக்கிழமைLA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ளதாகவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.
(ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)


imalai.com/wp-content/uploads/2018/05/IMG_7267.jpg”>

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here