வட கொரியா – தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது !

0
144

தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினர்.
அப்போது ஏப்ரல் 27 அன்று இருநாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இரு நாட்டு எல்லை யில் உள்ள அமைதி கிராமமான பான்முன்ஜியோமில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வரவேற்றார்.
வடகொரியா தென் கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லைக் கோட்டு பகுதியில் வந்திறங்கிய வடகொரிய அதிபர் கிம்மை, தென்கொரிய அதிபர் மூன் கைகுலுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதை தொடர்ந்து இருநாடுகளிடையேயான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதில் ஒன்று இருநாடுகள் இடையோன நேர கணக்கீடு. தென் கொரியாவைவிட, அரை மணிநேரம் பின்னதாக தனது நேரத்தை வைத்து இருந்தது.
இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து தனது நேர நேரத்தை வட கொரியா விட்டுக் கொடுத்துள்ளது.
நேற்று 23:30 மணியளவில் தனது நேரத்தை அரை மணிநேரம் முன்னதாக மாற்றியது. இதன் மூலம் தென் கொரியாவுக்கு இடையாக நள்ளிரவு 12.:00 மணி நேரத்தை வட கொரியாவும் ஏற்றுக் கொண்டது.
வட கொரியாவின் நேரம் அரை மணிநேரம் முன்நோக்கி சென்றதை அந்நாடு மட்டுமின்றி தென் கொரிய மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வரவேற்றனர். இந்த நெகிழ்வு தரும் நிகழ்வை உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் இரு கொரிய நாடுகளிலும் இனிமேல் ஒரே நேர மண்டலம் கடை பிடிக்கப்படும். இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது இருநாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என பேசி வரும் மக்களின் எண்ணங்களுக்கு இந்த நேரம் இணைந்தது முதல்படியாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here