முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை.!

0
212

 

வடக்குகிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்  பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்கள் இறுதிக்கட்டயுத்ததில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைவு கூருவதற்கு முன்வர வேண்டும் எனகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் எமது  உறவுகளை தொலைத்து 9 ஆண்டுகள் செல்கின்ற போதிலும் அரசாங்கம் எந்தவொருதீர்வையும் வழங்கவில்லையென அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2009 ஆண்டு இறுதிகட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களுக்காக மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால்பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்பட  இருக்கின்றது .

இந்த நிலையில்எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக மேற்கொள்ள உள்ளதாக  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் நடாத்தும் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சிகந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகள்ளி  நேற்று (04) வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைதெரிவித்துள்ளனர்.

காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு எவரும் ஒத்துழைப்பு வழங்கமுன்வராத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வந்தமையை வரவேற்பதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மே  18 முள்ளிவாய்காலில் நினைவு தினத்தில் கட்சி மத அரசியல் நலன்களுக்கு அப்பாலதமிழர் என்ற அடையாளத்துடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மட்டக்களப்பு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here