மாங்குளத்தில் இராணுவ முகாம் காணி நில அளவீட்டுப் பணி மக்களால் தடுத்து நிறுத்தம்.!

0
498

 

 

முல்லைத்தீவு மாவட்டத்தின்ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் கண்டி யாழ்ப்பாணவீதி ஓரமாக இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள மக்களது காணிகளை அதிகாரிகள் நிலஅளவை செய்வதற்காக சென்றவேளை, மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அதனைத் தடுத்துநிறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவுமாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் பகுதியில்கண்டி யாழ்ப்பாண வீதி ஓரமாக இராணுவத்தின் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ளது.

குறித்தமுகாம், மக்களது காணிகள் பலவற்றை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக சுவீகரிக்கப்பட்டுஅமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் கோரியும் இந்த காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவிட செல்வதனை அறிந்த மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இராணுவ முகாம் வாசலில் வைத்து நில அளவீட்டு பணிக்காக சென்றவர்களை திருப்பியனுப்பியுள்ளனர்.

இதனை காணி உரிமையாளர்கள் யாருக்கும் அறிவிக்கவில்லை எனவும் இரகசியமான முறையில் அளவீடுசெய்து இராணுவத்திற்கு வழங்கும் சதி திட்டமாக இதை பார்ப்பதாகவும் எல்லைப்படுத்தல் நடவடிக்கைக்காக காணிகளை அளவிடுவதாயின் உரிமையாளர்களான தங்களையும் அழைத்து காணிகளை அளந்து, தமது காணிகளை தம்மிடம் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து காணி அளவிடுவதற்காக சென்ற நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

இந்தநில அளவீட்டுக்கு எதிப்பு தெரிவித்து மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிரேம்காந்த் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச உறுப்பினர்களான மு.முகுந்தகஜன் சத்தியசீலன் உள்ளிட்டஉறுப்பினர்களும் கலந்துகொண்டு நில அளவீட்டு பணிகளை தடுத்துநிறுத்தியிருந்தனர்.

இந்த காணிக்கான ஆவணங்கள் மக்களிடம் இருப்பதாகவும் இராணுவம் அடாத்தாக பிடித்துள்ளதாகவும் இதனை தம்மிடம் மீட்டு தர சம்மந்தப்பட்டவர்கள் ஆவண செய்ய வேண்டுமெனவும் கோருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here