கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும்: க.வி.விக்னேஸ்வரன்!

0
120

maxresdefaultநாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம். எம்மை வளப்படுத்தி செழுமைப்படுத்துவது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தற்கால நலனும் வருங்கால நலனும்  கொண்டதாகும். கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனைத் அனைவரும்  தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   வடக்கு மாகாண சபையின்  26 ஆவது அமர்வு  நடைபெற்றது.

அதன்போதே இந்தக்கருத்தினை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார்.     அவர் மேலும் தெரிவிக்கையில்,    ஊடகம்  ஒன்றிற்கு நான் வழங்கியுள்ள செவ்வியில் உண்மைக்கு புறம்பான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.    அது குறித்த விளக்கத்தை சபையில் வழங்க வேண்டியது என கடமையாகும். நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி  மாலை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் சிலருடன் கொழும்பில் சந்தித்தேன்.

அதன்போது வடக்கு மாகாணத்தில் உள்ள இராணவ முகாம்களை அகற்றப்போவது இல்லை என மகாநாம தேரர்களிடம்  கூறப்போவதாக ரணில் என்னைப் பார்த்து கூறியது 100 வீதம்  உண்மை .    ஆனால் அவர் தான் கூறவில்லை என தற்போது கூறுவாராக இருந்தால் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்களை அகற்ற அவர் தற்போது சம்மதிக்கின்றாரா என்று அறியத்தர வேண்டும்.    யாழ்.வந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயவர்த்தன படைமுகாம்களை அகற்ற முடியாது என கூறியமை தொடர்பில் குறித்த ஊடகத்திற்கு தெரிவித்தமையினாலேயே பிரதமருடனான சந்திப்பு பற்றி பேசவேண்டி வந்தது.

இராணுவம் பற்றி தான் எதுவும் கூறவில்லை என ரணில் கூறுவாரானால் இராணுவத்தினை வெளியேற்றுவதில் பிரதமரின் நிலைப்பாட்டில் வித்தியாசம் இருப்பதுபோல தெரிகின்றது.    எனவே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவேன் என்று பிரதமர் கூறினால் இங்குள்ள மக்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.

அதைவிடுத்து த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் பேசுவேன் என்றும்  முதலமைச்சருடன் பேச மாட்டேன்  என்று கூறுவது எம்முள் பிரிவினையினை ஏற்படுத்த பயன்படுத்தும் உபாயமாகவே நான் கருதுகின்றேன்.    த.தே.கூ வினைப் பொறுத்தவரையில் எமக்குள் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. நாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம்.

எம்மை வளப்படுத்தி செழுமைப்படுத்துவது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தற்கால நலனும் வருங்கால நலனும்  கொண்டதாகும்.    எனவே கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனை அனைவரும் தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here