வளலாயில் காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு பணி: வடக்கு மாகாண முதலமைச்சர் ,அரசாங்க அதிபர், அமைச்சர்கள் விஜயம்!

0
152




உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வளலாய் பிரதேசத்தில், காணி உரிமையாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட வளலாய்ப்பகுதிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் , அமைச்சர்கள்  மற்றும்  உறுப்பினர்கள் விஜயம்  மேற்கொண்டனர். valalai-clening-3

வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவு மக்கள், அவர்களின் காணிகளைச் சென்று அடையாளப்படுத்த வெள்ளிக்கிழமை (13) அனுமதி வழங்கப்பட்டது.

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் வளலாய் ஜே – 284 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 272 குடும்பங்கள் தமது 232 ஏக்கர் காணிகளை கடந்த வெள்ளிக்கிழமை (13) அங்கு சென்று அடையாளப்படுத்தினர்.

valalai-clening-4

அதனையடுத்து காணி உரிமையாளர்கள், காணிகளை அடையாளப்படுத்தி துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அது தொடர்பில் காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு கூலிக்கு ஆட்களை அமர்த்தினால், ஒரு பரப்பு காணியினை துப்புரவு செய்ய 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் கூலி கேட்கின்றார்கள்.valalai-clening-2

அதனால், நாங்களே எமது காணிகளை துப்புரவு செய்து வருகின்றோம். நாங்கள் கடற்தொழில் செய்வதனால் இரவில் தொழிலுக்கு சென்று விட்டு காலையில் காணி துப்புரவாக்குவதற்காக, தற்போது இருக்கும் வீட்டில் இருந்து சமைத்து சாப்பாட்டை கட்டிக்கொண்டு குடும்பமாக வந்து காணிகளை துப்புரவு செய்கின்றோம்.

பின்னர் மாலை துப்புரவு வேலைகளை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு சென்று இரவு கடற்றொழிலுக்கு செல்கின்றோம்.

நாம் காணிகளை துப்பரவு செய்வதற்கு கத்தி, கோடரி, மண்வெட்டி, அலவாங்கு போன்ற உபகரணங்கள் இல்லாமையால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.

எமக்கு காணிகளை துப்புரவு செய்வதற்கு ஏதுவாக உபகரணங்களை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.

சொந்த நிலம் விடுவிக்கப்பட்ட மகிழ்வு ஒருபக்கம்  இருந்தாலும் மறுபக்கம் தங்களுடைய காணி எல்லைகளைக் கண்டுபிடிக்க முடியாதவாறு பற்ரைக்காடாக காணப்படுகின்றது என்றும் வீடுகள்  அனைத்தும் தரைமட்டம் ஆக்கப்பட்ட நிலையிலும் உள்ளதால் மீள்குடியேறுவதில் பாரிய சிரமங்களை அப்பகுதி மக்கள்  கொண்டுள்ளனர்.

இந்த நிலையில்  வளலாய்ப்பகுதிக்கு சென்ற வடக்கு முதலமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலான குழுவினர் , அமைச்சர்கள்  மற்றும் உறுப்பினர்களும்  நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன்  மக்களுடனும் கலந்துரையாடினர்.   –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here