பிரித்தானியாவில் உ ள்ள கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். நாஸாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு வாஸ்ப் – 104பி என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து கீல் பல்கலைக் கழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி டியோ மோக்னிக் கூறும்போது, “இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே இதுதான் மிகவும் இருண்ட கிரகமாக இருக்கிறது. தனது நட்சத்திரங்களிடமிருந்து பெறப்படும் ஒளியில் 99 சதவீதத்தை உள்வாங்கிக் கொள் கிறது. குறைந்த அளவு ஒளியை மட்டுமே இது உமிழ்கிறது.
ஒவ்வொரு கிரகமும் தங்களுக்கு அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து ஒளியைப் பெற்று உமிழ்வது இயல்பு. ஆனால் இந்த கிரகம் ஒளியை உட்கிரகித்துக் கொண்டு சிறிய அளவிலேயே வெளியே உமிழ்கிறது. வெள்ளி கிரகமானது 70 சதவீத ஒளியை உமிழ்கிறது. மற்ற சில கிரகங்கள் 10 சதவீத அளவிலேயே ஒளியை உமிழ்கின்றன.
மஞ்சள் நிற குறுகிய நட்சத்திர புவி வட்டப் பாதையில் உள்ளது. இது ஒரு சூடான வியாழன் கிரக வகையாக இருக்கலாம். வியாழன் கிரகமானது வாயுக்கள் நிறைந்தது. அதைப் போலவே சூடான வியாழன் கிரக வகைகள், வாயுக்களை அதிகமாகக் கொண்டிருக்கும்.
வாஸ்ப்-104பி கிரகமானது, தனது வட்டப் பாதையை சுற்றி வர 1.76 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்” என்றார்