நான் நாட்டுக்கு போகவேண்டும் அதனால இங்கு நடக்கும் நிகழ்வுகள் ஒன்றுக்கும் போறதில்லை…! நாட்டில நிலமை நல்லா இருக்குது அதனால இந்த நிகழ்வுகள் எல்லாம் தேவை யில்லை. உதுகளுக்கு முன்னால நிண்டால் போட்டோ எடுத்து போட்டு விடுவாங்கள்.
நானும் உந்த நிகழ்வுகள் ஒண்டுக்கும் போறதில்லை….! இது லாச்சப்பலில் உணவகம் ஒன்றில் இருவர்; பேசிக்கொண்டவை.
வேலைக்கள்ளிக்குப் பிள்ளைப் பிராக்கு என்பது போல பலரும் பலவிதமாகக் கதைப்பார்கள். அவற்றை நாம் காதில் போட்டால் நாம் காலம்காலமாகக் காலமாகக் கட்டிக்காத்துவந்த தேசிய உணர்வுகளுக்குத்தான் இழுக்கு.
எமது தாயகத்துக்குச் செல்லவேண்டும் என்ற ஆசை இவ்வாறானவர்களுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் இருப்பது வழமையானதே. ஆனால், ,புலம்பெயர் தேசத்து தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மை.
கடந்த 2005 ஆம் ஆண்டு இறுதிப்ப குதியில் யாழ். பல்கலைக்கழக சமூகத் தினரால் முன்னாள் துணைவேந்தர் சு.மோகனதாஸ் அவர்களின் தலைமையில் ஒரு அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. வடபகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளைக் கண்டித்தே இந்த அமைதிப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், முன்கூட்டியெ தயாராக இருந்த இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் குறித்த பேரணியைத் தடுப்பதற்காக பரமேஸ்வராச் சந்திப்பகுதியில் காத்தி ருந்து பேரணி மீது மிலேச்சத்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துடன், தடியடிப் பிரயோகமும் செய்து விரட்டியடித்தனர்.
இதனால், பல்கலைக்கழகப் பேராசிரி யர்கள், உத்திN யாகத்தர்கள், மாணவர் கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் காயமடைமந்தமையை நாம் மறந்துவிடமுடியாது.
அன்றிலிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் எல்லோருக்கும் இதுதான் கதி என மிரட்டி மக்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கிவைத்தனர்.
சுமார் 10 வருடங்கள் கடந்த நிலையில் கடந்த 24.02.2015 திங்கட்கிழமை அதே பல்கலைக்கழக சமூகத்தினரால் அமை திப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டு நடத்தியும் முடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்தே இந்த அமைதிப் பேரணியை
யாழ். பல்கலைக்கழகத்தின் பரமேஸ் வரன் கோயிலின் முன்றிலில் ஆரம்பமான பேரணி நல்லூர் கோயிலில் நிறைவு பெற்றது. அங்கு பேரணி நிறைவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் ஆணையாளருக்கான மகஜரை கொழும்பில் உள்ள ஐ.நா. பிரதிநிதி யிடம் வழங்குவதற்காக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப், இந்துக் குருமார் ஒன்றியத்தின் வாசு தேவக் குருக்கள் ஆகியோரிடம் கைய ளிக்கப்பட்டது.
மேலும் இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்க லைக்கழக மாணவர்கள, நாடாளுமன்ற, வட மாகாண உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக யாழ். இளவா லைப் பகுதியில் பொதுமக்கள்;hல் வீடு களை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இளவாலை காவல்துறை நிலையத்தின முன்னாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தமது வீடுகளைத் தமக்கு வழங்கக் கோரி பொது மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கடந்த இருபத்து நான்கு வருடங்குளுக்க மேலாகத் தமது வீடுகளை சிறிலஙகா காவல்துறை யினர் அத்துமீறி பிடித்து வைத்திருப்பதாகவும் தாம் தமது சொந்த வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் பல்வேறு துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித ;தார்கள்.
இளவாலை பங்கு தந்தை ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் காவல்துறை நிலையத்தின்முன்னால் கூடிய மக்கள் தமது கோரிக்கைகள் அடய்கிய பல்வேறு சுலோகங்களையும் தாங்கிய வாறே குறித்த போராட்டத்தில் ஈடுபட் டனர்.
விரைவில் வீடுகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக சிறிலய்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து பொதுமக்களின் சார்பிலான மகஜரையும பெற்றுக்கொண்டதாகவும் யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அந P தியை ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும்.’ என்ற தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையே நினைவுக்கு வருகின்றது.
அந்தவகையிலே பாதிக்கப்பட்டவர்கள் எழுச்சியடைந்தால் நாம் எமது விடுத லையை முன்னெடுக்கமுடியும்.
இதேவேளை, வலி.வடக்கு முன்னரங்க பகுதி வேலிகள் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பலரையும் கேள்விக்குள்ளாக் கியுள்ளது.
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள், விடுவிக்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்ட பிரதேசம் பற்றி தகவல்கள் வெளியாகாதபோதும் வளலாய் பகுதியே அப்பகுதியென உறுதியாகியுள்ளது.
இதனிடையே இன்னமும் பாதுகாப்பு முன்னரங்க வேலி பின்னகர்த்தப் பட வில்லை. இதனை நகர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுக் கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. வலி.வடக்கு, வலி.கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களினுள் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பற்றைக் காடுகளாகவே பெரும்பாலான பிரதேசங்கள் காணப்படுகின்றன. வளலாயில் ஒரு பகுதி மாத்திரமே துப்புரவு செய்யப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தை எல்லைப் படுத்தி அமைக்கப பட்டிருந்த நிரந்தர பாதுகாப்பு வேலிக்குரிய தூண்கள் எதுவும் அகற்றப் படவில்லை. அத்துடன் உள்ளே அமைக் கப்பட்டிருந்த முன்னரங்க பாதுகாப்பு வேலியும் இன்னமும் அகற்றப் பட வில்லை. இவற்றை உடனடியாக அகற்றுமாறு, மீள்குடியேற்ற அமைச்சர், இராணுவத்தினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் மூன்று வாரங்களுக்குள் மக்களைக் குடியமர்த்து வதற்குரிய வகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
ஆயினும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பதில் இன்னும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை யீனமே இருந்துவருகின்றது.
இதேவேளை, இராணுவத்தினர் வசம் இருக்கும் விவசாய அமைச்சுக்குச் சொந்தமான பண்ணைகளையும் கூட்டு றவு சங்கக் கட்டடங்களையும் விடுவித் துத் தாருங்கள் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜய விக்கிரம பெரேராவிடம் வடமாகாண விவ சாயஅமைச்சர் ஐங்கரநேசன் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
வடபகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறி வைத்தே மத்திய அமைச்சர்கள் தினந் தோறும் வடக்குக்கு வந்து கொண்டிருக் கிறார்கள் என்பதே எமது மக்களின் கருத்தாக உள்ளது.
அவ்வாறு இல்லா மல், உண்மை யாகவே தமிழ் மக்கள் மீது கொண் டுள்ள கரிசனையால்தான், இங்கே வந்து செல்வதாக இருந்தால் அதை மெய்ப் பிக்கும் வகையில் சிலவற்றை செய்தாக வேண்டும்.
வடக்கில் கூட்டுறவுத்துறை கொடிகட்டி பறந்த ஒரு காலம் இருந்தது. எமது மக்கள் ஜனநாயக ரீதியாக நிர்வகிக் கக்கூடிய கூட்டுறவு அமைப்;புகளை உருவாக்கி தங்களது பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வந்துள் ளார்கள்.
கூட்டுறவுச் சங்கங்களினது இலாப வருவாய்க்கும் சமூகத்தின் தேவை களுக்கும் இடையில் ஒருவித சமநிலை பேணப்பட்டு, கூட்டுறவும் சமூகமும் ஒன்றை யொன்று சார்ந்து வளர்ச்சி பெற்றிருந்தன. எமது வெங்காயச் செய்கையாளர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி அச்சுவேலியில் தங்களுக்கென சொந்தக் கட்டடம் ஒன் றையே நிறுவினார்கள். ஆனால் அந்தச் சங்கக் கட்டடத்தில் இன்று அடாத்தாக இராணுவமே நிலை கொண்டிருக்கிறது. எமது மக்களுக்குச் சொந்தமான வள மான விவசாய நிலங்களிலும் இராணு வமே பயிர் செய்து கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்கு காலத்துக்கு காலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதிக விளைச்சலை தரக்கூடிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங் கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் எங்களால் செய்யமுடியாத விதத்தில் எமது மாகாண அமைச்சுக்கு சொந்த மான வட்டக்கச்சி விதை உற்பத்தி பண்ணை யிலும், இரணைமடு சேவைக் கால பயிற்சி நிலையத்திலும் வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங் கிருந்து எல்லா இராணுவம் வெளியேற் றப்பட வேண்டும்’ என்றார்.
எனவே, இராணுவ ஆக்கிரமிப்பு எமது மக்களின் அன்றாட நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கின்றது. வரும் 16.03.2015 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஒன்றுகூடி எமது மக்களின் எழுச்சியை சர்வதேசத்துக்கு உணர்த்தி நிற்போம் வாரீர்! சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
நன்றி: ஈழநாடு