வட மாகாணத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்த காணிகளில் 80 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரின் வசமிருந்த 56,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார் .
ஏனைய பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் சிறீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து மேலும் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 21,698.79 ஏக்கர் காணி விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 24,390.35 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7066.69 ஏக்கர் காணியும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரணைத்தீவிலுள்ள, பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும் சாத்வீகப் போராட்டம் 361 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத் தகாது .