அணு ஆயுத ஒப்பந்தத்தில் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்!

0
186

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருங்கள். இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2015-ம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபத்யாக இருந்த பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.
ஈரான் அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் ட்ரம்ப் விதித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here