வருடத்தில் 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் ஆயிரம் சட்ட விரோத கருக்லைப்புகள் இடம்பெறுகின்றன. சட்ட விரோத கருக்கலைப்புகள் அங்கீகரிக்கப்படாத இடங்களில், தகுதியற்ற நபர்களாலும் இவை மேற்கொள்ளப்படுகின்றன என் தெரிவித்த அவர்,
இச் செயலில் சுமார் 40 ஆயிரம் சட்விரோத கருக்கலைப்பு மருத்துவர்கள் செயற்படுகின்றனர். என்றும் அரச மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இவ்வாறான கருக்கலைப்புக்கள் நிகழ்த்தப்படுகின்றன.
இவ்வாறு கருக்கலைப்புக்குப் பயன்படுத்தும் உபகரணங்களால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் பதிவு செய்யப்படாத மருந்து களே வழங்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.