சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரணைதீவு பூர்வீக நிலத்தை விடுவிப்பதற்கான போராட்டம் ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும் தங்களுடைய சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இரணைதீவு மாநகரில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுவருகிறது.
இதற்காக இரணைதீவு மக்கள் பல படகுகளில் இன்று காலை வெள்ளைக்கொடிகள் சகிதம் இரணைதீவுக்குச் சென்றுள்ளார்கள்.
தங்களுடைய காணிகளைப் பார்ப்பதற்காகவும் அவற்றை விடுவிப்பது தொடர்பாக கடற்படையுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்காகவும் அருட்தந்தை, சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்பினர், ஊடகவியலாளர்கள் சகிதம் வௌ்ளைக் கொடியுடன் மக்கள் படகுகளில் இரணைமடுவை நோக்கி சென்றனர்.
“வாழ்வாதாரத்துக்காக முழுமையாக கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பில் தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளை இலங்கை கடற்படை கையளிக்க வேண்டும்” என்று இந்தக் குழுவினருடன் சென்றுள்ள பங்குத்தந்தை அருள்செல்வன் தெரிவித்தார்.