படை­யி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க அர­சும், நீதி­மன்­றங்­க­ளும் தயக்­கம் காட்­டு­கின்­றன!

0
168


அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணை­க்க­ளத்­தால் ஆண்டு தோறும் வெளி­யி­டப்­பட்டு வரும், நாடு­க­ளின் மனித உரிமை நடை­மு­றை­கள் தொடர்­பான 2017ஆம் ஆண்­டுக்­கான அறிக்கை நேற்­று ­முன்­தி­னம் வெளி­ யி­டப்­பட்­டுள்­ளது.
இலங்கை உள்­ளிட்ட 200 இற்­கும் மேற்­பட்ட நாடு­கள் மற்­றும் பிராந்­தி­யங்­க­ளின் மனித உரி­மை­கள் நிலை பற்றி இதில் விளக்­க­மாக கூறப்­பட்­டுள்­ளது.
இலங்­கை­யில் 2017ஆம் ஆண்­டில் மிக முக்­கி­ய­மான மனித உரி­மை­கள் விவ­கா­ரங்­க­ளாக, சட்­ட­வி­ரோத கொலை­கள், சித்­தி­ர­வ­தை­கள், பாலி­யல் அத்­து­மீ­றல்­கள், கண்­மூ­டித்­த­ன­மான கைது­கள், நீண்ட தடுத்­து­வைப்பு, இரா­ணு­வம் சொத்­துக்­களை மீளிக்­கா­தமை, சிவில் சமூ­கத்­தி­னர் மற்­றும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மீதான கண்­கா­ணிப்பு மற்­றும் தொந்­த­ர­வு­க­ளைக் குறிப்­பி­ட­லாம்.
தமி­ழர்­கள் படை­யி­ன­ரால் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தும், அர­சின் பாகு­பா­டு­க­ளும் தொடர்­கின்­றன. பொது­மக்­களை படை­யி­ன­ரும், காவல் துறையினரும் துன்­பு­றுத்­து­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஆயு­தப் போரின் போதும், அது முடி­வுக்கு வந்த பின்­ன­ரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் தண்­ட­னை­யில் இருந்து தப்­பிக்­கும் நிலை தொடர்­கி­றது.
மனித உரிமை மீறல்­க­ளில் ஈடு­பட்ட சில அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப் பட்­டுள்­ளது. காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கம் சட்­ட­பூர்­வ­மாக உரு­வாக்­கப்­பட்­டுள் ­ளது . எனி­னும், ஏனைய நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தில் அரசு மட் டுப்­ ப­டுத்­தப்­பட்ட முன்­னேற்­றங்­க­ளையே எட்­டி­யுள்­ளது.
போர்க்­கால மீறல்­க­ளுக்கு தண்­ட­னை­யில் இருந்து தப்­பித்­தல் இன்­ன­மும் தொடர்­கி­றது. குறிப்பாக, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இலக்கு வைத்து கொல்­லப்­பட்­டமை, கடத்­தப்­பட் டமை, ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மற்­றும் பொது­மக்­கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று குற்­றம்­சாட்­டப்­பட்ட இரா­ணு­வம், துணை ஆயு­தப்­ப­டை­கள், பொலிஸ் மற்­றும் ஏனைய பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­கள் தண்­டனை விதிக்­கப்­ப­டாத நிலை இன்­ன­மும் நீடிக்­கி­றது.
பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க அர­சும், நீதி­மன்­றங்­க­ளும் தயக்­கம் காட்­டு­கின்­றன. இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் உள்­ளக கண்­கா­ணிப்பை மேற்­கொண்டு, சிவில் சமூ­கத்­தி­னரை துன்­பு­றுத்­தி­னர் அல்­லது அச்­சு­றுத்­தி­னர்.
கடந்த ஆண்டு மே மாதம், முல்­லைத்­தீ­வில் ஆயு­தப் போரில் உயி­ரி­ழந்த குடும்ப உறுப்­பி­னர்­களை நினை­வு­கூ­ரும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த கத்­தோ­லிக்க மத­குரு ஒரு­வர் காவல் துறையின ­ரி­னால் துன்­பு­றுத்­தப்­பட்­டார்.
உயர்­பா­து­காப்பு வல­யங்­க­ளுக்­குள் அமைந்­தி­ருந்த காணி­களை இரா­ணுவ மய நீக்­கம் செய்­யும் நட­வ­டிக்­கை­கள் மிக மெது­வா­கவே இடம்­பெ­று­கின்­றன. இரா­ணு­வம் பிடித்து வைத்­துள்ள காணி­கள் பொரு­ளா­தார ரீதி­யாக பெறு­மதி வாய்ந்­தவை.
ஒரு புத்­தர் சிலையை அல்­லது அரச மரத்தை வைத்து விட்டு அதற்கு பௌத்த பிக்­கு­கள் உரிமை கொண்­டா­டு­வ­தால், அதி­கா­ர­பூர்­வ­மாக நிலத்­துக்கு உரிமை கோர முடி­யா­தி­ருப்­ப­தாக, சில சிறு­பான்மை மதத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர், என்­றும் அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளத்­தின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here