அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய சர்வதேச  சிவப்பு அறிவித்தல்!

0
167

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தலை சர்வதேச காவல்துறை விடுத்துள்ளது.
இவரை கைது செய்வதற்காக சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சர்வதேச காவல்துறைக்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபராக குறிப்பிடப் பட்டுள்ள அர்ஜூன மகேந்திரன், நீதிமன்ற உத்தரவை மீறியமையினால் அவரை கைது செய்வதற்காக சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச ஒத்துழைப்பைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here