பிரித்தானியாவில் நடைபெறுகின்ற பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் இனப்படுகொலையாளியும் சிறீலங்காவின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறீசேனாவுக்கு எதிராக பிராத்தினியாவாழ் தமிழர்களால் எதிர்ப்பு ஆர்பாட்டம் மேற்கொள்ள்ளப்பட்டுள்ளது.
இன்று (19) பகல் 13.00 மணிக்கு ஒன்றுகூடிய தமிழ் மக்கள் சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிராக கொட்டொலிகளை முழங்கி பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.