சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 வரை வழங்கியது !

0
156

சிறீலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சிறீலங்கா கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23 இல் கையொப்பமிட்டிருந்தார்.

இந்த வரிச் சலுகை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சிறீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம்திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கமல் இருந்தது .

ஜி.எஸ்.பி கடந்த 2017 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியதால், சிறீலங்கா மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 01, 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here