தமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் நினைவிடத்தில் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

0
182


தமிழீழத் தாயவள் அன்னைபூபதியின் 30 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அன்னையின் நினைவிடம் அமைந்துள்ள மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை இடம் பெற்றது.
பூபதியம்மாவின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா அன்னை பூபதியின் திருவுருவபடத்துக்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரை ஏற்றினார்.
தொடர்ந்து அவரின் பிள்ளைகள் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் த.சுரேஸ், மட்டு .மாநகர சபை மேஜர் சரவணபவான், ஜக்கிய தேசிய கட்சி மாவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரன் அரசியல் கட்சியினர்கள் பொதுமக்கள்கள் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட அமைதி வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here