தமிழகத்திலிருந்து கௌதம புத்தரின் புனிதப் பொருள்கள் சிறீலங்காவுக்கு அனுப்பி வைக்கப் படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழகப் பல்கலைக்கழகமொன்றில் புத்தரின் புனிதப் பொருள்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்தப் புனிதப் பொருள்களை பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் சிறீலங்காவுக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப் பட்டிருந் தது.
இந்திய அரசு இது தொடர்பில் எம்.எஸ் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கையை முன்வைத்திருந் தது. எனினும், இந்தக் கோரிக்கையைப் பல்கலைக்கழகம் முன்னதாக ஏற்றுக் கொண்டிருந்தது பின்னர், புனிதப் பொருள்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வேறு தொல்பொருள் முக்கியத்து வம் வாய்ந்த பொருள்களை சிறீலங்காவுக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள் ளது. புத்தரின் புனிதப் பொருள் கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்படாது என்று தெரிவிக் கப்படுகிறது.
Home
ஈழச்செய்திகள் புத்தரின் புனிதப்பொருள்கள் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறீலங்காவுக்கு வழங்கப்படாது!