யாழ்ப்­பா­ணத்­தில் நாங்­கள் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வில்லை!

0
147

மகிந்த அணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைக்க ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின்  எடுத்த நட­வ­டிக்­கையை மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ளவோ – மன்னிக்கவோ  மாட்­டார்­கள் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­துள்ளார்.
வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர் தெரிவு முடி­வ­டைந்த பின்­னர் செய்தியாளருக்கு  கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

நாங்­கள் மக்­க­ளால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்டு கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­தோம். இருப்­பி­னும் அதிஷ்­டத்­தின் மூலம் இன்று நீதி வென்­றி­ருக்­கின்­றது. இந்த வன்னி மண்­ணிலே எங்­களை அழித்து ஒழித்து நிர்­க­தி­யாக்­கிய மகிந்­த­வின் கட்­சி­யோடு இணைந்து ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு கேட்ட செயற்­பாட்டை தமிழ் மக்­கள் ஒரு­போ­தும் மன்­னிக்க மாட்­டார்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் நாங்­கள் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வில்லை. என்றும் அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் சுய­மா­கவே செயற்­பட்­டார்­கள். அது அவர்­க­ளு­டைய சொந்த விருப்­பம்.
வவு­னியா நகர சபை­யில் தவி­சா­ள­ராக தமி­ழர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு வாழ்த்­துக்­க­ளைக் கூறிக் கொள்­கின்­றேன் – என்­றார்.

இதேவேளை சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவின் பங்காளிக் கட்சியான டக்ளசின் ஈபிடிபியின் ஆதரவை பெற்றே சாவகச்சேரி நகரசபையில் ஆட்சி அமைத்துள்ளமை  குறிப்பிடத் தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here