வேற்றுக்கிரகங்களை தேடி விண்கலம் அனுப்பும் நாசா!

0
200

உயிர்வாழ சாத்தியம் கொண்ட வேற்றுக்கிரகங்களை தேடும் முயற்சியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சலவை இயந்திரத்தின் அளவு கொண்ட 337 மில்லியன் டொலர் செலவில் இன்று விண்கலம் ஒன்றை செலுத்தவுள்ளது.

டெஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலையில் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் போல்கன் 9 ரொக்கெட் முலம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

இந்த செயற்கைக்கோள் அடுத்த இரண்டு ஆண்டகளில் 200,000க்கும் அதிகமான ஒளிரும் நட்சத்திரங்களை அவதானித்தில் அவைகளில் ஏற்படும் ஒளிமங்கல் கொண்டு வேற்றுக்கிரகங்களை கண்டுபிடிக்கவுள்ளது.

இந்த டெஸ் விண்கலம் 20,000 வேற்று கிரகங்கள் அல்லது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கிரகங்களை கண்டுபிடிக்கும் என்று நாசா கணித்துள்ளது. இதில் 50 பூமியின் அளவான கிரகங்கள் மற்றும் 500 வரையான பூமியின் அளவில் இரண்டு மடங்கை விட குறைவான கிரகங்கள் அடங்கும். 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நாசாவின் கெப்ளர் விண்கலத்தின் தொடர்ச்சியாகவே டெஸ் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. வயதான கெப்ளர் விண்கலம் தற்போது குறைந்த எரிபொருளுடன் செயலிழப்பதை நெருங்கி வருகிறது.

கெப்ளர் சூரியனை ஒத்த சுமார் 150,000 நட்சத்திரங்களை அவதானித்து பெருமளவான வேற்றுக்கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதன்படி அந்த செயற்கைக்கோள் 2,300 வேற்றுக் கிரகங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நான்கு மேம்படுத்தப்பட்ட கெமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும் டெஸ் விண்கலம் தனது முதல் இரண்டு ஆண்டு காலத்தில் மாத்திரம் ஒப்பீட்டளவில் 85 வீதமான வானை விடவும் 350 மடங்கு பெரிய பகுதியை நுட்பமாக அவதானிக்கவுள்ளது.

எனினும் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆய்வு செய்த முறையிலேயே டெஸ் விண்கலமும் நட்சத்திரம் ஒன்று கிரகங்கள் குறுக்காக கடக்கும்போது ஏற்படும் ஒளி மங்கலை கொண்டே கிரகங்களை கண்டுபிடிக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here