கடந்த புதன்கிழமை (11) சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை இரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ரஷ்யா கூறியுள்ளது.
சர்வதேச குழு, சனிக்கிழமை முதல் சிரியாவில் இருந்தாலும், டூமா பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது .
சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரித்தானியா பிரான்சு நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தி இருந்தன .
சிரியாவில் இரசாயன தாக்குதல் நடக்கவில்லை என சிரியாவும், ரஷ்யாவும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது .