பிரான்சிலிருந்து ஜெனிவா நோக்கித் தொடருந்து வெற்றிகரமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
இன்று திங்கட்கிழமை காலை 7.09 மணிக்கு தொடருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.
வழமைபோன்று பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் தமது பயணத்தைத் தொடர்வதற்கு முண்டியடித்துச் சென்றதைக் காணமுடிந்தது.
அத்தோடு, தொடருந்தில் மக்களுக்கு வேண்டிய உணவு, சிற்றுண்டி வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை, தொடருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரும் பெருமளவான மக்கள் வருகைதந்திருந்தனர்.
இதனைக் கருத்தில்கொண்ட ஏற்பாட்டாளர்களால் தொடருந்து அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, தொடருந்தைத் தவறவிட்ட பயணிகளுக்கு விசேட தொடருந்து ஒழுங்குசெய்யப்பட்டது.
இதனையடுத்து காலை 09.09 மணிக்கு நூற்றுக் கணக்கிலான தமிழ்மக்களையும் தாங்கி மற்றொரு தொடருந்து புறப்பட்டுச்சென்றது. இதனால் மக்கள் ஏமாற்றத்தைத் தவிர்த்துக்கொண்டனர்.
எழுச்சிகரமாக நிகழ்வுகளில் கலந்து விட்டு குறிப்பிட்டபடி இரவு 9.36 மணிக்கு பாரிஸை தொடருந்து வந்தடைந்தது !