சுதந்திரக்கட்சி ஆதரவுடன் தமிழர் விடுதலைக்கூட்டணியை வவுனியா நகரசபையில் ஆட்சி!

0
148

வவு­னியா நகர சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு , ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது எனினும் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் ராசலிங்கம் கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு இன்று காலை நடைபெற்றது. வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற அமர்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனுக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார். உப தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி 11 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here