700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை!

0
145


பாகிஸ்தான் ராணுவம் பாபர் ஏவுகணையை நேற்று (14)வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்திய நகரங்களை குறிவைக்கும் வகையில் சுமார் 700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட . இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது .
அதிநவீன காற்றியக்கவியல் மற்றும் மின்னணுவியல் முறைகளை கொண்டிருப்பதால் தரை மற்றும் கடலில் உள்ள எவ்வித இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்றும் பல்வேறு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறப்பதோடு சில வகை ஸ்டெல்த் அம்சங்களையும் கொண்டுள்ளது. வழிகாட்டுதல் இல்லாமலும் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்படி பல்வேறு ஊடுருவல் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ள என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது .
பாபர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானிற்கு பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனையின் போது பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பதை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் உசேன் மற்றும் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி ஆகியோர் ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here