தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை நேற்று அனைவரும் கொண்டாடினர். உறவினர் வீடுக ளுக்கும் சென்று கொண்டாடி மகிழ்ந்தனர். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உரிமைகளுக்காக வீதிகளில் போரா டும் மக்கள் புத்தாண்டைப் புறக்கணித்து தமது இடங்களில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கேப்பாபிலவில் போராடும் மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்ததாவது; “இன்று (14) தமிழ் சிங்களப் புத்தாண்டு. நாங்கள் 413 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
நேற்று (13) தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்கள் இரண்டு பேருந்துகளில் போதகர் ஒருவர் மூலம் வந்து எங்களைப் பார்வையிட்டுள்ளார்கள். எம்மை பார்க்க பேருந்தில் இருந்து இறங்கிய சிங்கள மக்களை எங்கள் போராட்டக் கொட்டகைக்கு முன்னால் நிலைகொண்டுள்ள படை யினர் மறித்து மிரட்டினர்.
படையினரின் அச்சுறுத்தலினால் வந்தவர்களில் சிலர் பேருந்தை விட்டு இறங்காமல் பேருந்திலே இருந்தார்கள். இது சிங்கள மக்களை அச்சுறுத்தும் ஒரு செயல். அந்த மக்கள் எங்கள் போராட்டத்தின் நியாயத் தன்மையைப் புரிந்து கொண்டு எங்களைப் பார்க்கவந்துள்ளார்கள். ஆனால் அவர்களைப் படைச் சிப்பாய் மிரட்டியுள்ளார். எங்கள் போராட்டம் நீதியானது.
அதன்பாலே போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். எமது நிலம் எப்போது விடுவிக் கப்படுகிறதோ அப்போதுதான் எமக்குப் புதுவருடம் அது வரை நாங்கள் தொடர்ந்து போராடு வோம்” என்றார்.