வலி. வடக்கில் சிறீலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து நேற்று (13) விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்குள் இன்னும் 3 இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் இருக்கின்றன.
683 ஏக்கா்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட கணக்கு காட்டபட்ட போதும் தொடர்ந்து இராணுவ முகாம்கள் இயங்குவதால் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஏக்கர் காணிகள்தான் விடுவிக்கப் பட்டனவா என்கிற சந்தேகத்தையும் எழுந்துள்ளது .
150 மீற்றா் நோ்வழிப் பாதையானது முட்க்கம்பிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதைக்குப் பதிலாக தனியாா்களின் காணிகளினூடாக மாற்றுப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியின் முக்கிய பாதையாக இருந்த பாதையே இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளது. இப் பாதையில் இராணுவமுகாம் அகற்றப் படாமல் இருக்கின்றது .
இது உலகை ஏமாற்ற சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என விசனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.