காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 400 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வருபவர்களின் கூடாரத்துக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி கத்தியால் அச்சுறுத்தி உள்ளார்.
நீங்கள் போராட்டம் செய்வதையும் ஒருக்கா பாப்பம் , உங்களை கொல்லுவன் என கத்தியை காட்டி மிரட்டி கதிரை மற்றும் அங்கு இருந்த சமையல் பாத்திரங்களை வெட்டியபோது அங்கு இருந்தவர்கள் அவரை பிடிக்க முயற்சித்த வேளை தப்பியோடிய நபர் அவரை அருகிலிருந்த வீதிப்பாதுகாப்பு கடமையில் இருந்த காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.