இன்று தெற்கு அல்ஜீரியாவில் விமானப்படைத் தளத்திலிருந்து படையினரையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினர் உட்பட 257 பேர் பலியாகி உள்ளதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று காலை 9.15 மணிக்கு இடம் பெற்ற இவ் விபத்தில் படையினரும் அவர்களது குடும்பத்தினரும் பயணம் செய்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்விதம் 2014 ஆம்ஆண்டு பெப்ரவரியில் இடம் பெற்ற விமான விபத்தில் படையினரும் அவர்களது குடும்பத்தினருமாக 77 பேர் பலியாகி இருந்தனர்.